கருப்பையா கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை


கருப்பையா கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
x
தினத்தந்தி 4 Jun 2023 10:35 PM IST (Updated: 4 Jun 2023 10:36 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே கருப்பையா கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை போனது.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்:

சின்னசேலத்தில் இருந்து சிறுவத்தூர் செல்லும் சாலையில் கருப்பையா கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்த நிலையில் கோவில் முன்புறம் வைக்கப்பட்டிருந்த உண்டியலை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் உடைத்து, அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், சின்னசேலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த உண்டியலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதே கோவிலில் கடந்த 2020-ம் ஆண்டும் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.


Next Story