உயிருக்கு போராடிய குரங்கு குட்டியை காப்பாற்ற முயன்ற வியாபாரிகள்; சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ


உயிருக்கு போராடிய குரங்கு குட்டியை காப்பாற்ற முயன்ற வியாபாரிகள்; சமூக வலைத்தளங்களில் வைரலான வீடியோ
x

கொடைக்கானலில் உயிருக்கு போராடிய குரங்கு குட்டியை வியாபாரிகள் காப்பாற்ற முயன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல்

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா இடங்கள் உள்ளன. அதில், கோக்க‌ர்ஸ்வாக் சுற்றுலா இடமும் ஒன்று. இந்த சுற்றுலா இடத்தின் உள்பகுதியில் கடைகளும் செயல்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் கோக்க‌ர்ஸ்வாக் சுற்றுலா இடத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் குரங்கு குட்டி ஒன்று பாறையின் ந‌டுவே கிடந்தது. இத‌னை பார்த்த அப்பகுதி வியாபாரிக‌ள், அந்த‌ குர‌ங்கு குட்டியை மீட்டனர். அப்போது அது உயிருக்கு போராடி கொண்டிருந்தது. இதனால் வியாபாரிகள் அந்த குட்டியை அரவணைத்து, மித‌மான‌ சூட்டில் த‌ண்ணீர் கொடுத்து, முக‌த்தை துடைத்து, சுறுசுறுப்பாக மாற்ற முயற்சி செய்தனர். அத்துடன் அந்த குட்டியை பத்திரமாக வ‌ன‌த்துறை அலுவலர்களிடம் ஒப்ப‌டைத்துள்ள‌ன‌ர்.

பின்னர் அவர்கள், குரங்கு குட்டியை சிகிச்சைக்காக கொடைக்கானல் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த குரங்கு குட்டி உயிரிழந்தது. இதையடுத்து அந்த குரங்கு குட்டியின் உடல் வனப்பகுதியில் புதைக்கப்பட்டது. இருப்பினும் உயிருக்கு போராடிய குரங்கு குட்டியை வியாபாரிகள் அரவணைத்து காப்பாற்ற முயன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.


Related Tags :
Next Story