கேரளாவில் பருவமழை தீவிரம்: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு


கேரளாவில் பருவமழை தீவிரம்: முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு
x

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

தேனி

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று அணையின் நீர்மட்டம் 133.20 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரத்து 143 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1,789 கன அடியாகவும் இருந்தது.

இந்நிலையில் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுருளிப்பட்டி சாலையில் உள்ள தொட்டன்மன்துறை தடுப்பணை பகுதியில் தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. இதையொட்டி ஆற்றையொட்டிய பகுதிகளில் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story