மாணவர்களுக்கு மழைக்கால தற்காப்பு விழிப்புணர்வு முகாம்
தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில் மாணவர்களுக்கு மழைக்கால தற்காப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை
அரக்கோணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மழைக்காலங்களில் தற்காத்து கொண்டு மற்றவர்களையும் எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை சார்பில் நடந்தது. சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ரங்கன் தலைமையிலான வீரர்கள் மாணவர்களுக்கு செயல் முறையில் செய்து காண்பித்தனர்.
நிகழ்ச்சியில் முதலுதவி சிகிச்சை அளிப்பது, மழை காலங்களில் நீர் நிலை பகுதிகளில் எப்படி இருக்க வேண்டும் மற்றும் ஆபத்து நேரத்தில் வீட்டில் உள்ள பொருட்களை மீட்பு உபகரணங்களாக அமைத்து எப்படி தற்காத்து கொள்வது ஆகியவற்றை செயல் விளக்கமாக வீரர்கள் செய்து காண்பித்தனர். இதில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story