"நிலவு, செவ்வாய் கிரகத்திற்கு சர்வதேச ஒத்துழைப்புடன் செல்ல வேண்டும்" - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை


நிலவு, செவ்வாய் கிரகத்திற்கு சர்வதேச ஒத்துழைப்புடன் செல்ல வேண்டும் - விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை
x

விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய அளவில் பணம் செலவழிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் தாய்த் தமிழ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் 25-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் புதிய பள்ளி கட்டிட திறப்பு விழாவில் இஸ்ரோ முன்னாள் இயக்குநரான விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய வகுப்பறை, கணினி அறைகளை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குழந்தைகள் தாய்மொழியில் கல்வி கற்பது தான் அறிவியல்ப்பூர்வமாக சிறந்தது என்றும், அறிவியல் கருதுகோள்களை புரிந்துக் கொள்ள தாய்மொழி கல்வி அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

விண்வெளி ஆய்வில் மிகப்பெரிய அளவில் பணம் செலவழிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்று தெரிவித்த அவர், இனி வரும் காலங்களில் விண்வெளி ஆய்விற்காக நிலவுக்கோ, செவ்வாய்க்கோ செல்ல வேண்டுமானால் பல நாடுகள் இணைந்து சர்வதேச ஒத்துழைப்புடன் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

முன்னணியில் இருக்கும் நாடுகள் இணைந்து அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இந்தியர்கள் நிலவில் கால்பதிக்கும் காலம் கூடிய விரைவில் வர வேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



Next Story