மொரப்பூர் ஊராட்சியில்காசோலைகளில் தலைவர், துணைத்தலைவர் கையெழுத்திடும் அதிகாரம் ரத்துகலெக்டர் சாந்தி உத்தரவு


மொரப்பூர் ஊராட்சியில்காசோலைகளில் தலைவர், துணைத்தலைவர் கையெழுத்திடும் அதிகாரம் ரத்துகலெக்டர் சாந்தி உத்தரவு
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

மொரப்பூர்:

மொரப்பூர் ஊராட்சி மன்ற தலைவராக உமாராணி, துணைத்தலைவராக வினோதா ஆகியோர் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடியாமல், அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு சென்றடைவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனிடையே இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றங்களை சுமத்தி வந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஊராட்சிகளின் ஆய்வாளர், சார்நிலை அலுவலர்கள் மூலம் ஒற்றுமையாக செயல்பட வலியுறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஊராட்சி நலன்கருதி மொரப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் உமா ராணி மற்றும் துணைத்தலைவர் வினோதா ஆகியோர் ஊராட்சியின் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்தும், மறு ஆணை பிறப்பிக்கும் வரை ஊராட்சியில் அனைத்து கணக்குகள் மற்றும் காசோலைகளில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முதன்மை கையெழுத்திடவும், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இணை கையெழுத்திடவும் தற்காலிக அதிகாரம் வழங்கி கலெக்டர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.


Next Story