கீழடி அகழாய்வில் யானை தந்தத்தில் செய்யப்பட்ட பாசி மணி கண்டுபிடிப்பு


கீழடி அகழாய்வில் யானை தந்தத்தில் செய்யப்பட்ட பாசி மணி கண்டுபிடிப்பு
x

கீழடி அகழாய்வில் யானை தந்தத்தால் செய்யப்பட்ட பாசி மணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்து வரும் அகழ்வாராய்ச்சியில் எலும்புகளால் செய்யப்பட்ட எழுத்தாணி, கூர்முனை கொண்ட எலும்பு கருவிகள், யானை தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, அரவைக்கல், பானை ஓடுகள், சதுரங்க காய்கள், பகடைக்காய், மண் குடுவை, சூதாட்டத்தில் பயன்படுத்தப்படும் பவள மணிகள், சுடு மண் வார்ப்பு, காளையின் தலை, மனித உடல் பாகம், மனித தலை உருவம், தங்க அணிகலன்கள், ஆபர மணிகளை கோர்க்கும் கருவி போன்ற ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தற்போது யானை தந்தத்தால் செய்யப்பட்ட பாசி மணி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மணி அளவில் சற்று பெரியதாக உள்ளது.

இந்த மணி சுருள் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மேற்பரப்பு மெருகூட்டப்பட்ட மென்மையான அமைப்பை கொண்டுள்ளது. இருமுனைகளும் தட்டையாக உள்ளது.

மேற்கண்ட தகவல் தொல்லியல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story