பாசிப்படர்ந்த ஊருணிகள்


பாசிப்படர்ந்த ஊருணிகள்
x

மல்லாங்கிணறில் ஊருணியில் பாசிப்படர்ந்து வளர்ந்துள்ளன.

விருதுநகர்


விருதுநகர் அருகே உள்ள மல்லாங்கிணற்றில் சின்ன ஊருணி, பாப்பா ஊருணி, காக்காச்சி ஊருணி என 3 ஊருணிகள் உள்ளன. கடந்த காலங்களில் பொதுமக்கள் இந்த ஊருணிகளில் துணி துவைப்பதையும், குளிப்பதையும் வழக்கமாக கொண்டு இருந்தனர். நீண்ட நாட்களாக இந்த ஊருணிகள் தூர்வாரப்படாத நிலையில் முட்புதர்கள் ஆக்கிரமித்து காணப்படுகிறது. தற்போது மழை பெய்ததால் இந்த ஊருணிகளில் நீர் நிரம்பிய நிலையில் முட்புதர்களாலும், பாசிப்படர்ந்து காணப்படுவதாலும் ஊருணியில் உள்ள நீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே பேரூராட்சி நிர்வாகம் இந்த ஊருணிகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story