மகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி


மகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி
x

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு மகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி வீட்டுமனை பட்டா வழங்காததால் விரக்தி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தனது மகளுடன் வந்த பெண் ஒருவர் திடீரென கேனில் இருந்த மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைபார்த்து அங்கே பாதுகாப்புக்கு நின்று கொண்டிருந்த போலீசார் ஓடிச்சென்று அவர்களிடம் இருந்த கேனை பிடுங்கியதோடு இருவரின் உடலிலும் தண்ணீரை ஊற்றினர்.

விசாரணையில் அவர்கள் சங்கராபுரம் தாலுகா சு.கள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்த தென்னரசு மனைவி சித்ரா(38), இவரது மகள் சுவாசிகா(10) என்பதும் குடும்பத்துடன் வாடகை வீ்ட்டில் வசித்து வரும் சித்ரா வீ்ட்டு மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்து ஓராண்டாகியும் பட்டா வழங்காதததால் விரக்தி அடைந்த அவர் மகளுடன் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. பின்னர் போலீசாரின் அறிவுரையின் பேரில் சித்ரா தனது மகளுடன் கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் வீட்டு மனைப்பட்டா கேட்டு மனு கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story