விஷம் குடித்து தாய் - மகள் தற்கொலை
ஏலச்சீட்டு நடத்தி நஷ்டம் ஏற்பட்டதால் தாய் -மகள் விஷம் குடித்து தற்கொலை செய்தனர். கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது
சூலூர்
ஏலச்சீட்டு நடத்தி நஷ்டம் ஏற்பட்டதால் தாய் -மகள் விஷம் குடித்து தற்கொலை செய்தனர். கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
ஏலச்சீட்டு
சூலூர் பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் காந்தரூபன் (வயது50). இவருடைய மனைவி பழனியம் மாள் (48). இவர்களுடைய மகள் தீஷ்னாதேவி (25) காந்தரூபன் முன்பு குடும்பத்துடன் கோவை ராமநாதபுரம் பகுதியில் வசித்து வந்தார்.
அவர்கள், கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் சூலூருக்கு குடியேறினர். காந்தரூபன் கோவை ராமநாதபுரத்தில் வசித்த போது, அந்த பகுதி மக்களிடம் பணத்தை பெற்று ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அந்த சீட்டுப் பணத்தை வட்டிக்கும் விட்டதாக தெரிகிறது.
பணம் கேட்டு நெருக்கடி
இந்த நிலையில் அவர், வட்டிக்கு கொடுத்த பணம் திரும்பி வர வில்லை. இதனால் சீட்டு கட்டியவர்களுக்கு பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் சீட்டு போட்டவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. அதோடு பலரிடம் வாங்கிய கடனையும் திருப்பி கொடுக்க முடியாமல் காந்தரூபன் அவதிப்பட்டு வந்துள்ளார்.
தாய் - மகள் தற்கொலை
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த காந்தரூபன் குடும்பத் துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார். அதன்படி, காந்தரூபன், அவரது மனைவி, மகள் ஆகியோர் நேற்று அதிகாலையில் விஷம் குடித்தனர்.
இதனால் காலையில் நீண்டநேரம் ஆகியும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வர வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரது வீட்டுக்கு சென்று பார்த்த போது, பழனியம்மாள், தீஷ்னாதேவி ஆகியோர் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கணவர் உயிர் ஊசல்
விஷம் குடித்த காந்தரூபன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.