உலக கடல் பசு தினத்தை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்


உலக கடல் பசு தினத்தை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம்
x

உலக கடல் பசு தினத்தை முன்னிட்டு மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

உலக கடல்பசு தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்திய வனவிலங்கு நிறுவனம் சார்பில் 3 நாட்கள் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்று வருகிறது. முதல் நாள் நடைபெற்ற ஊர்வலம் ராமேசுவரத்தில் தொடங்கி ராமநாதபுரத்தில் முடிவடைந்தது. 2-ம் நாள் ஊர்வலம் முத்துக்குடாவில் தொடங்கி மணமேல்குடியில் முடிவடைந்தது. இறுதி மற்றும் 3-ம் நாள் ஊர்வலம் கட்டுமாவடியில் தொடங்கி மனோராவில் நிறைவடைந்தது. கட்டுமாவடியில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தை இந்திய வனவிலங்கு நிறுவனத்தை சேர்ந்த ஸ்வேதாஐயர், அறந்தாங்கி வனச்சரக அலுவலர் மேகலா ஆகியோர் தொடங்கி வைத்தனர். கடல்பசு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் கடல்பசுவை காப்போம், கடல்வாழ் உயிரினங்களை காப்போம், நமது பெருங்கடலைக் காப்போம் என்ற செய்தியைப் பரப்பும் கோஷங்கள் முழங்க ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் இந்திய வனஉயிர் நிறுவனத்தை சேர்ந்த அஜித்குமார், பிரவீன், மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், மணமேல்குடி வன அலுவலர் அன்புமணி, சோனைமுத்து, வேட்டை தடுப்பு காவலர் முத்துராமன் மற்றும் இந்திய வனவிலங்கு நிறுவனம், புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை, கடலோர காவல் துறை, மீன்வளத்துறை மற்றும் உள்ளூர் மீனவர்கள் என அதிகமானோர் கலந்து கொண்டனர்.


Next Story