பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி


பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; வாலிபர் பலி
x

பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள அழகநேரியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 25). இவரும் அதே ஊரைச் சேர்ந்த முத்துகணேஷ் (21) உள்பட 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் நெல்லை அருகே உள்ள ஆரைக்குளம் பகுதியில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது, பஸ் நிறுத்தத்தில் நின்ற பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது. இதில் 3 ேபரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கார்த்திக் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story