மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலியானார்.
திருநெல்வேலி
நெல்லை அருகே கங்கைகொண்டானை அடுத்த சண்முகாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகன் அரவிந்த் (வயது 21). இவர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் பிஸ்கெட் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று அதிகாலையில் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றார்.
கங்கைகொண்டான் அருகே தனியார் மாவு மில் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அரவிந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கங்கைகொண்டான் போலீசார் விரைந்து சென்று, அரவிந்த் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story