நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பார்த்த ரசிகருக்கு மோட்டார் சைக்கிள் பரிசு...!


நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பார்த்த ரசிகருக்கு மோட்டார் சைக்கிள் பரிசு...!
x

தென்காசியில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் பார்த்த ரசிகருக்கு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில் மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டு உள்ளது.

தென்காசி


உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் தென்காசியில் உள்ள ஒரு தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை முதல் காட்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு குலுக்கல் முறையில் மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்படும் என்று மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற துணைச்செயலாளர் சி.அருணன் அறிவித்திருந்தார்.

அதன்படி இதற்கான குலுக்கல் நேற்று நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள தாயார் தோப்பு பகுதியைச் சேர்ந்த டான் ஆசீர் என்பவரின் பெயர் குலுக்கலில் விழுந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு பல்சர் மோட்டார் சைக்கிள் இன்று காலை குற்றாலத்தில் உள்ள ஒரு விடுதியில் வைத்து வழங்கப்பட்டது.

இதனை மாநில தி.மு.க. தொழிலாளர் அணி துணை செயலாளர் செல்வராஜ் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சீனி துரை, அழகுசுந்தரம், நற்பணி மன்ற மாவட்ட செயலாளர் சி.அருணன், மாவட்ட தலைவர் ஈஸ்வரன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சாமிதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story