மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; 2 பேர் பலி


மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; 2 பேர் பலி
x

மோட்டார் சைக்கிள்-மொபட் மோதல்; 2 பேர் உயிரிழந்தனர்.

அரியலூர்

கீழப்பழுவூர்:

தொழுகை முடிந்து திரும்பினர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் திடீர் குப்பத்தை சேர்ந்தவர் காதர்மைதீன்(வயது 60). இவரது மகன் ஷேக் அப்துல்லா(30). இவர்கள் நேற்று பள்ளிவாசலில் தொழுகை முடித்துவிட்டு, தங்களது வீட்டிற்கு மொபட்டில் சென்றனர். மொபட்டை ஷேக் அப்துல்லா ஓட்ட, காதர்மைதீன் பின்னால் அமர்ந்திருந்தார்.

வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே சென்றபோது, எதிரே ஆங்கியனூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகனின் மகன் சரவணவேல்(16), பிச்சை பிள்ளையின் மகன் வல்லரசு(26), ராமநாதபுரம் மாவட்டம் தூத்துவலசை கிராமத்தை சேர்ந்த நந்தகுமாரின் மகன் சந்துரு(15) ஆகிய 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளும், மொபட்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

2 பேர் சாவு

இதில் படுகாயம் அடைந்த காதர்மைதீன், வல்லரசு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஷேக் அப்துல்லா, சரவணவேல், சந்துரு ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார், அங்கு சென்று இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் வாலிபர் மற்றும் முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story