மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

மோட்டார் சைக்கிள் திருட்டு

கன்னியாகுமரி

திருவட்டார்:

மார்த்தாண்டம் அருகே உள்ள நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது53), ஆட்டோ டிரைவர். இவர் கட்டிடங்களுக்கு பால்ஸ் சீலிங் அமைக்கும் பணியையும் செய்து வருகிறார். இவரிடம் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரம்ஜான் அலி (36), அக்பர் அலி (22) ஆகிய இருவர் வேலை செய்து வருகிறார்கள். இதற்காக அவர்கள் சாமியார்மடத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வேலைக்கு செல்வதற்காக ஜெயக்குமார் தனது மோட்டார் சைக்களை கொடுத்துள்ளார். சம்பவத்தன்று இரவு ரம்ஜான் அலி வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. அதை யாரோ திருடி சென்றிருந்தனர்.

இதுகுறித்து ஜெயக்குமார் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story