மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது
மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
வந்தவாசி
மோட்டார்சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
வந்தவாசியை அடுத்த வடவணக்கம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கிஷோர் (வயது 28). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
சம்பவத்தன்று இரவு இவர் வீட்டின் எதிரே மோட்டாரை்சைக்கிளை நிறுத்தியிருந்தார். காலை வெளியே வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து வடவணக்கம்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை மழையூர் கூட்டுச் சாலையில் சப் -இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சேத்துப்பட்டில் இருந்து வந்தவாசி நோக்கி பைக்கில் வந்த 2 நபர்கள் போலீசாரை கண்டதும் வந்த வழியே திரும்பி செல்ல முயன்றனர்.
இதனை கவனித்த போலீசார் அவர்களை மடக்கினர். அப்போது மோட்டார்சைக்கிளின் பின்னால் வந்தவர் தப்பியோடி விட்டார். பிடிபட்டவரிடம் விசாரித்தபோது அவரது பெயர் சேத்அஜீஸ் (30) என்பதும் வடவணக்கம்பாடி பகுதியில் கிஷோரின் ோட்டார்சைக்கிளை திருடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜீசை கைது செய்து ோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அஜீசை வந்தவாசி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தப்பி ஓடிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.