மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது


மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது
x

மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை


மயிலாடுதுறை காவிரி நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 36). இவர், கடந்த 16-ந் தேதி ரயிலடி தூக்கனாங்குளம் வடகரையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணாமல் திடுக்கிட்டார். யாரோ மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து மயிலாடுதுறை போலீசில் விக்னேஷ் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை பார்வையிட்டு இந்த திருட்டில் ஈடுபட்ட மர்மநபரை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில், விக்னேசின் மோட்டார் சைக்கிளை திருடிய மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர் அன்பனாதபுரம் மேலத்தெருவை சேர்ந்த கலைமணி (33) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கலைமணி மீது ஏற்கனவே வழிப்பறி உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story