திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி


திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; வாலிபர் பலி
x

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த தண்ணீர்குளம் பகுதியை சேர்ந்தவர் அன்பு. இவரது மகன் சரவணன் (வயது 31). இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் ஜிம் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு 6 மாதத்துக்கு முன்னர் திருமணமாகி நந்தினி என்ற மனைவி உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல சரவணன் வேலை முடித்துக் கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் திருவள்ளூரில் இருந்து தண்ணீர்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் திருவள்ளூரை அடுத்த ராமாபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே ஆவடியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

இதில் படுகாயம் அடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த திருவள்ளூர் அடுத்த ஒதிக்காடு எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்த நாகராஜ் (26) படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதை பார்த்த அந்த வழியாக அந்த வாகன ஓட்டிகள் காயம் அடைந்த நாகராஜை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story