ஸ்ரீ வைகுண்டம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் - மாட்டு வியாபாரி பலி


ஸ்ரீ வைகுண்டம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் - மாட்டு வியாபாரி பலி
x
தினத்தந்தி 2 July 2022 9:18 PM IST (Updated: 2 July 2022 9:20 PM IST)
t-max-icont-min-icon

ஶ்ரீவைகுண்டம் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாட்டு வியாபாரி உயிரிழந்தார்.

ஶ்ரீவைகுண்டம்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள மீரான் குளத்தை சேர்ந்தவர் முத்தையா இவரது மகன் நாகராஜ்(வயது68), மாட்டு வியாபாரியான இவர், இன்று மாலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பத்மநாபமங்கலம் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டு அவரது வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.

இப்போது தெற்கு தோழப்பன்பண்ணையை அடுத்த தண்ணீர் கம்பெனி அருகே செல்லும்போது, அந்த வழியாக எதிரே வந்த அடையாளம் தெரியாத நபரின் பைக் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். எதிரே வந்து விபத்து ஏற்படுத்திய நபர் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் நாகராஜ் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story