மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்; முதியவர் பலி
மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், ஆர்.டி.மலை ஊராட்சி கீழவாளியம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி(வயது 65). இவர் விவசாய கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கள்ளையில் நடைபெற்ற திருவிழாவிற்கு நாடகம் பார்ப்பதற்காக தனது மோட்டார் சைக்கிளில் கள்ளைக்கு சென்றார். திருச்சி- கள்ளை மெயின் ரோட்டில் சென்றபோது, எதிரே வந்த கள்ளை ஊராட்சி சின்ன கள்ளையை சேர்ந்த பெரியசாமி மகன் சந்திரசேகர்(26) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள், பழனிசாமி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் பழனிசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனிசாமியின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பழனிசாமியின் மனைவி பாப்பம்மாள் அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் சந்திரசேகர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.