பெட்ரோலில் கலப்படம் செய்து இருப்பதாக கூறி பெட்ரோல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்ட வாகன ஓட்டிகள்


பெட்ரோலில் கலப்படம் செய்து இருப்பதாக கூறி பெட்ரோல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்ட வாகன ஓட்டிகள்
x

பெட்ரோலில் கலப்படம் செய்து இருப்பதாக கூறி பெட்ரோல் விற்பனை நிலையத்தை முற்றுகையிட்ட வாகன ஓட்டிகளை சமாதானம் செய்த போலீசார், பெட்ரோல் நிலையம் மூட அறிவுறுத்தினர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் இந்தியன் ஆயில் நிறுவன தனியார் பெட்ரோல் நிலையம் இயங்கி வருகிறது. நேற்று காலை இந்த பெட்ரோல் நிலையத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் பலர் வரிசையாக நின்று பெட்ரோல் நிரப்பி கொண்டு சென்றனர். அப்போது பலரது இருசக்கர வாகனங்கள் பழுதடைந்து பாதி வழியில் நின்றது. இரு சக்கர வாகனங்களை தள்ளி கொண்டு அருகில் உள்ள மெக்கானிக் கடைக்கு சென்றனர். பெட்ரோலில் தண்ணீர் கலந்திருப்பதாக மெக்கானிக்குகள் கூறியதால் அதிர்ச்சியடை வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வாகன ஓட்டிகளை சமாதானம் செய்தனர். பெட்ரோலில் கலப்படம் உள்ளதா? என்பதை உறுதி செய்ய சென்னையில் உள்ள அறிவியில் மைய சோதனை கூடத்திற்கு அனுப்பி வைப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து வாகன ஓட்டிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர் அந்த பெட்ரோல் நிலையத்தை மூட போலீசார் அறிவுறுத்தியதன் பேரில் பெட்ரோல் நிலையம் மூடப்பட்டது.


Next Story