பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் தடுமாறும் வாகன ஓட்டிகள்


பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் தடுமாறும் வாகன ஓட்டிகள்
x

பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.

விருதுநகர்

தாயில்பட்டி,

கணஞ்சாம்பட்டி ஊராட்சியை சேர்ந்த சத்திரப்பட்டியில் இருந்து தாயில்பட்டி செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லை. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் பள்ளத்தில் தடுமாறி விழும் நிலை உள்ளது. இந்த பாலத்தின் வழியாக தான் கோமாளிப்பட்டி, வனமூர்த்திலிங்காபுரம், சத்திரப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் சைக்கிளில் சென்று வருகின்றனர். தடுப்புச்சுவர் இல்லாததால் பாலத்தில் இருந்து தவறி விழும் நிலை உள்ளது. எனவே தரைப்பாலத்தில் உடனடியாக தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story