முன் அறிவிப்பு இன்றி ரெயில்வே கேட் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி


முன் அறிவிப்பு இன்றி ரெயில்வே கேட் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி
x

முன் அறிவிப்பு இன்றி ரெயில்வே கேட் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

திருச்சி

முக்கொம்பு அருகே உள்ள கொடியாலத்தில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டை தாண்டி கொடியாலம், சுப்புராயன்பட்டி, புலிவலம் பகுதிக்கு செல்ல முடியும். இதன் வழியாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தொழிலாளர்கள் என தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் முன் அறிவிப்பு இன்றி ெரயில் வே கேட் மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதி அடைந்தனர். இது தொடர்பாக ரெயில்வே பணியாளர்களிடம் கேட்டனர். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு பராமரிப்பு பணிகள் செய்வது நிறுத்தப்பட்டு ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வழக்கம்போல் சென்று வந்தனர். இது பற்றி ெரயில்வே பணியாளர் கூறும்போது, கடந்த 9, 10-ந்் தேதிகளில் ெரயில்வே கேட் பராமரிப்பு பணி நடைபெறுவதாக இருந்தது. அப்போது மழை பெய்ததால் பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. பொதுமக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இன்னும் ஒரு சில தினங்களில் முறையான அறிவிப்பு கொடுக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறும் என்றார்.


Next Story