பழைய மாமல்லபுரம் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி


பழைய மாமல்லபுரம் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி
x

பழைய மாமல்லபுரம் சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு

பழைய மாமல்லபுரம் சாலை சிறுசேரியில் இருந்து கந்தன் சாவடி வரை 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சாலையின் நடுவில் இரும்புத்தகடுகள் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நிலையில் பழைய மாமல்லபுரம் சாலை நாவலூர் உள்ளிட்ட சில பகுதிகளில் மாடுகள் மாலை நேரங்களில் சாலைகளில் வலம் வருவதும், சாலையில் படுத்துக்கிடப்பதையும் காணமுடிகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தினந்தோறும் சிரமத்துடனும், அச்சத்துடன் செல்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story