சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி


சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி
x

சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

திருவள்ளூர்

மீஞ்சூர் அருகே உள்ள நாலூர்- கேசவபுரம் கிராமங்களுக்கிடையை திருவொற்றியூர் நெடுஞ்சாலை செல்கிறது. இந்த பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகள் மாட்டுக்கொட்டகைகளில் தங்காமல் சாலையில் சுற்றி திரிகின்றது. இரவு நேரத்தில் நெடுஞ்சாலையில் மாடுகள் படுத்துக்கொள்வதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் கடந்த சில தினங்களுக் முன்பு இந்த பகுதியில் காலை நேரத்தில் விபத்தில் சிக்கி பலியான 3 மாடுகள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த மீஞ்சூர் பேரூராட்சி பணியாளர் குமார் என்பவர் மோதி படுகாயம் அடைந்தார். எனவே மேற்கண்ட சாலையில் கால்நடைகளை திரிய விடும் உரிமையாளர்கள் மீது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story