தமிழ்ப்பல்கலைக்கழகம்- திருவள்ளுவர் தமிழ் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்


தமிழ்ப்பல்கலைக்கழகம்- திருவள்ளுவர் தமிழ் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
x

தமிழ்ப்பல்கலைக்கழகம்- திருவள்ளுவர் தமிழ் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தஞ்சாவூர்

தமிழ் பண்பாடு, மரபை வளர்க்கும் வகையில் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம், திருவள்ளுவர் தமிழ்சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

தமிழ்ப்பல்கலைக்கழகம்

தமிழக அரசின் நிதி நல்கையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்ப் பண்பாடு, மரபை வளர்ப்பதற்காக தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக தமிழ் பண்பாட்டு மையத்துடன் சென்னை மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்த ஒப்பந்தத்தில் தமிழ்ப்பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) சி.தியாகராஜன், மயிலைத் திருவள்ளுவர் தமிழ் சங்க நிறுவன செயலாளர் சேயோன். தமிழ்நாடு அரசின் முன்னாள் கூடுதல் தலைமை செயலாளரும், சங்க பணித்திட்டக்குழு தலைவருமான ஸ்ரீதர் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

இது குறித்து துணைவேந்தர் திருவள்ளுவன் கூறியதாவது:-

ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது புதன்கிழமைகளில் இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை பண்பாட்டு அரங்கம் நிகழ்வுறும். இதில் தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகிலுள்ள அனைத்துத் தமிழ் அறிஞர்களும், உலகளாவிய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களும், தமிழ் சங்கங்களின் தமிழ்த் தொண்டர்களும் பங்கேற்று தமிழின் வளர்ச்சியையும் பண்பாட்டு மரபினையும், புத்தெழுச்சியையும் விளக்கி கூறுவார்கள்.

தமிழ், இந்திய பண்பாட்டினையும் உலகறியச் செய்யும் வகையில் கருத்தரங்கம், பயிலரங்கம், உரையரங்கம், கவியரங்கம் முதலான பல்வகை வடிவங்களில் நிகழ்ச்சியை வழங்குவது இதன் நோக்கமும் செயல்பாடும் ஆகும். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மயிலைத் திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம் பேச்சு, கட்டுரை, நாடகம், கவிதை, இசை, ஓவியம், நகைச்சுவை, நடனம் முதலான போட்டிகளை நடத்தி விருதுகளை வழங்கி மகிழும் வண்ணம் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்ப்பண்பாட்டு மைய இயக்குனர் திலகவதி, தமிழ்ப்பண்பாட்டு மைய இணை இயக்குனர் கற்பகம், உதவிப்பதிவாளர் மல்லிகா, உதவியாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story