மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் டீசல் என்ஜின் சோதனை ஓட்டம்
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் டீசல் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மேட்டுப்பாளையம்
மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் டீசல் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
டீசல் என்ஜின்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அழகிய மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு டீசல் மூலம் இயங்கும் நீராவி ரெயில் என்ஜின்களும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு டீசல் மூலம் இயங்கும் என்ஜின்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருச்சி பொன்மலை ரெயில்வே பணிமனையில் மலைரெயிலுக்கு டீசல் மூலம் இயங்கும் நீராவி ரெயில் என்ஜின் தயாரிக்கும் பணி தொடங்கியது. மலை ரெயில் என்ஜினின் பழமை மாறாமல் புதிய தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணங்களுடன் ரூ.9.30 கோடி மதிப்பில் 7 மாதத்தில் புதிய மலை ரெயில் என்ஜின் தயாரிக்கும் பணி நிறைவடைந்தது.
சோதனை ஓட்டம்
அதனை தொடர்ந்து கடந்த 5-ந் தேதி திருச்சி பொன்மனை ரெயில்வே பணிமனையில் புதிதாக தயாரிக்கப்பட்ட மலை ரெயில் என்ஜின் மேட்டுப்பாளையம் ரெில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் 2 கிரேன்கள் உதவியுடன் மலை ரெயில் என்ஜின் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள யார்டில் பத்திரமாக இறக்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்தில் உள்ள லோகோ செட் பணிமனையில் புதிதாக தயாரிக்கப்பட்ட மலை ரெயில் என்ஜின் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது சோதனைக்கு பின்னர் முதல் கட்டமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி மலைப்பாதையில் உள்ள அடர்லி ரெயில் நிலையம் வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டம் வெற்றியடைந்த பின்னர் 2-வது கட்டமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து மலைப்பாதையில் குன்னூர் வரை புதிய மலைரெயில் என்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
ஆய்வு
புதிதாக தயாரிக்கப்பட்ட டீசல் மூலம் இயங்கும் நீராவி ரெில் என்ஜினில் 4 பெட்டிகள் இணைக்கப்பட்டு நேற்று காலை 9.30 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து சோதனை ஓட்ட ரெயில் புறப்பட்டு சென்றது. மலை ரெயில் பாதையில் சோதனை ஓட்ட ரெயில் செல்லும் போது ரயில் என்ஜினில் ஏற்படும் மாற்றங்களை ரெயில்வே பொறியாளர்கள் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.