மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே தண்டவாளத்தில் விழுந்த பாறாங்கற்கள் -ஒரு மணி நேரம் மலை ரெயில் தாமதம்


மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே தண்டவாளத்தில் விழுந்த பாறாங்கற்கள் -ஒரு மணி நேரம் மலை ரெயில் தாமதம்
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே தண்டவாளத்தில் பாறாங்கற்கள் விழுந்தன. இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக மலை ரெயில் புறப்பட்டு சென்றது.

கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே தண்டவாளத்தில் பாறாங்கற்கள் விழுந்தன. இதனால் ஒரு மணி நேரம் தாமதமாக மலை ரெயில் புறப்பட்டு சென்றது.

மண்சரிவு

கோவை -நீலகிரி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக மேட்டுப்பாளையம் -ஊட்டி மலை ரெயில் பாதையில் அடர்லி- ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே மண் சரிவு ஏற்பட்டு ரெயில் பாதையில் சிறிய பாறைகள் உருண்டு விழுந்தன.இதனால் ரெயில் பாதையில் தண்டவாளங்கள் இடையே பொருத்தப்பட்ட பல்சக்கரங்கள் சேதமடைந்தது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு வழக்கம் போல் நேற்று காலை 7.10 மணிக்கு 180 சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட மலைரெயில் காலை 8.30 மணிக்கு அடர்லி ரெயில் நிலையத்தில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.

ஒரு மணி நேரம் தாமதம்

இதனை தொடர்ந்து ரெயில்வே தொழிலாளர்கள் ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரெயில் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த சிறிய பாறாங்கற்களை கயிறு கட்டி இழுத்து அப்புறப்படுத்தினர். ரெயில் தண்டவாளங்கள் இடையே சேதம் அடைந்த ராக் பார்களை அகற்றிவிட்டு புதிய ராக்பார்கள் பொருத்தப்பட்டது. ரெயில் பாதையை சீரமைக்கும் பணி காலை 9 மணிக்கு முடிவடைந்தது. அதன் பின்னர் மலை ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக காலை 11.20 மணிக்கு குன்னூரைச் சென்றடைந்தது. அதன் பின்னர் மலை ரெயில் அங்கிருந்து புறப்பட்டு ஊட்டி ரெயில் நிலையத்தை சென்றடைந்தது.இதனால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.


Next Story