ஓமலூர்-மேட்டூர் அணை இரட்டை ரெயில் பாதை பணி: தர்மபுரி, ஓசூர் வழியாக செல்லாமல் 2 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்


ஓமலூர்-மேட்டூர் அணை இரட்டை ரெயில் பாதை பணி:  தர்மபுரி, ஓசூர் வழியாக செல்லாமல் 2 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
x

ஓமலூர்-மேட்டூர் அணை இரட்டை ரெயில் பாதை பணிக்காக தர்மபுரி, ஓசூர் வழியாக செல்லாமல் 2 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

சேலம்

சூரமங்கலம்:

ஓமலூர்-மேட்டூர் அணை இடையே இரட்டை ரெயில் பாதை அமைப்பதற்கான பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி சேலம் வழியாக செல்லும் 2 ரெயில்கள் தர்மபுரி, ஓசூர் வழியாக செல்லாமல் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது.

அதன்படி கோவை-லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-11014) வருகிற 28-ந் தேதி கோவை ரெயில் நிலையத்தில் இருந்து காலை 8.50 மணிக்கு புறப்பட்டு சேலம், திருப்பத்தூர், பங்காருபேட்டை வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் தர்மபுரி, ஓசூர் வழியாக இயங்காது.

இதேபோல் எர்ணாகுளம்- கே.எஸ்.ஆர் பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12678) வருகிற 28-ந் தேதி எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு சேலம், திருப்பத்தூர் பங்காருபேட்டை, பையப்பனப்பள்ளி வழியாக இயக்கப்படும். இந்த ரெயில் தர்மபுரி, ஓசூர் கர்மேலரம் வழியாக இயங்காது. இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story