"தலைவர் தான் கைது ஆகிட்டாருல்ல.."எம்ஆர்பி ரேட்-க்கே தாங்க.. காமெடி செய்த மதுபிரியர்..!


தலைவர் தான் கைது ஆகிட்டாருல்ல..எம்ஆர்பி  ரேட்-க்கே தாங்க.. காமெடி செய்த மதுபிரியர்..!
x

தலைவர் தான் கைது ஆகிட்டாருல்ல.. எம்ஆர்பி ரேட்டுக்கு கொடுங்க என கேட்டு மதுபானம் வாங்கும் மதுப்பிரியரின் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சென்னை,

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி 2-வது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், ஓமந்தூரார் மருவமனை நிர்வாகம் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து தகவல் அளித்துள்ளது. அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவுடன் உள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி இதயத்தில் 90 சதவீதம் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

செந்தில் பாலாஜியின் ரத்த அழுத்தம் இதயத்துடிப்பு சீராக உள்ளது. அவரது இதயத்தில் மூன்று இடத்தில் அடைப்பு உள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளும், உணவுகளும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டு வருகிறது. அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்துவரும் நிலையில் தற்போது மருத்துவர்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், ஈரோடு மாவட்டம் அரசூர் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் அங்கு வந்த மதுப்பிரியர், தலைவர் தான் கைது ஆகிட்டாருல்ல.. எம்ஆர்பி ரேட்டுக்கு கொடுங்க என அடம்பிடித்தப்படி மதுபானம் வாங்கியுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story