46 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்த முன்னாள் மாணவர்கள்
தாராபுரம்:
தாராபுரம் 5 கார்னர் பகுதியில் அரசினர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. 1976-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி படித்த மாணவர்கள் அதே பள்ளியில் 46 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்தனர்.
தங்கள் வகுப்பறைக்கு சென்று தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் பள்ளி தோழர்களுடன் உட்கார்ந்து பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
அன்றைய வகுப்பாசிரியர் மாசிலாமணிக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து முன்னாள் மாணவர் கூட்டமைப்பு சார்பில் பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாக நிதி அளிப்பதுடன், பிளஸ்-2 படித்து உயர்கல்விக்கு வெளியே செல்லும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புள்ள கல்வி ஆலோசனை வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் இணை ஒருங்கிணைப்பாளர்கள் சக்திவேல், பாலசுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.