முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் சண்முகப்பிரியா ராஜேஷ் தலைமை தாங்கினார். துணை தலைவர் கண்ணகி ஜெகதீசன், ஆணையாளர்கள் ஜானகி, தேவப்பிரியதர்ஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலாளர் சிவகாமி அனைவரையும் வரவேற்றார்.
ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர் கூறும் ேபாது, கருங்காலக்குறிச்சி கிராமத்திற்கு போர்வெல் அமைத்து பைப் லைன் நீட்டிப்பு செய்து தர வேண்டும். விளங்களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்றார். கருமல் கவுன்சிலர் சசிகலா முருகன் பேசும் போது, கருமல் ஊருக்குள் செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளதால் தார் சாலை அமைக்க வேண்டும் என்றார். இதற்கு ஆணையாளர் ஜானகி கூறுகையில் போதுமான நிதி இல்லாததால் நிதி வந்தவுடன் அனைத்து கவுன்சிலர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.