முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் 8-ம் நாள் திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குட ஊர்வலம்
முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் 8-ம் நாள் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
முக்கூடல்,
நெல்லை மாவட்டம் முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவில் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான மரங்களுக்கு இடையில் அழகிய கோவிலாக அமைந்துள்ளது. இக்கோவில் நெல்லை மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக உள்ளது.
இத்தகைய சிறப்பு மிக்க முக்கூடல் முத்துமலை அம்மன் கோவிலில் ஆனி மாதம் 11 நாட்கள் திருவிழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கோவிலில் இன்று 8-ம் நாள் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து முத்துமாலை அம்மனை தரிசனம் செய்தனர். பத்தாம் நாள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் என்பதால் அன்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கோவிலுக்கு வருவார்கள் என்று கூறப்படுகின்றது.
இதற்கான ஏற்பாடுகள் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.