தேருக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி


தேருக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
x

விராலிமலை முருகன் கோவிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு தேருக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை

விராலிமலை முருகன் கோவில்

விராலிமலையில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் சமேத வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு வருடம்தோறும் தைப்பூசத்தையொட்டி மலைமேல் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு அன்றிலிருந்து திருவிழா 10 நாட்களுக்கு நடைபெறும்.

தினமும் சுவாமி வீதி உலா நடைபெறும். அதேபோல் இந்த வருடமும் தைப்பூசத்தையொட்டி கடந்த 27-ந்் தேதியன்று கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அன்று முதல் முருகப்பெருமான் சமேத வள்ளி-தெய்வானையுடன் கேடயம், மயில், பூதம், நாகம், சிம்மம், வெள்ளி மயில் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

இதனையடுத்து இன்று மலையடிவாரத்தில் உள்ள தேருக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் முகூர்த்தக்காலுக்கு புனித நீர் ஊற்றி முகூர்த்தக்கால் நடப்பட்டது. அதனை தொடர்ந்து நாளை(புதன்கிழமை) முதல் தேர் அலங்காரம் செய்யும் பணியானது தொடங்க உள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் வருகிற 4-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. அதனை தொடர்ந்து 5-ந் தேதி இரவு தெற்கு தெருவில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. 6-ந் தேதி விடையாற்றியுடன் விழாவானது நிறைவடைகிறது.


Next Story