செல்லியம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம்


செல்லியம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம்
x
தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

செல்லியம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம்

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் ஆடி மாத 47-வது ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. இவ்விழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் குத்துவிளக்கு பூஜை, கரகம் எடுத்தல், அக்னிச்சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல், அம்மன் பூ பல்லக்கு ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றது. கடைசி நாளான நேற்று பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. முளைப்பாரியை செல்வியம்மன் கோவிலில் இருந்து வடக்கூர் முருகன் கோவில், பஸ் நிலையம், காந்தி சிலை உள்ளிட்ட முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்று சங்கரபாண்டி ஊருணியில் கரைத்தனர். விழா ஏற்பாட்டினை முதுகுளத்தூர், மு. தூரி, செல்வநாயகபுரம் ஆகிய கிராமத்தை தேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.


Next Story