மூலனூர் ஒன்றிய பகுதிகளில் கொடியேற்று விழா


மூலனூர் ஒன்றிய பகுதிகளில் கொடியேற்று விழா
x
திருப்பூர்


திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் மூலனூர், வேளாண் பூண்டி உள்ளிட்ட 3 ஊராட்சிகளில் பா.ஜ.க. கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் பா.ஜ.க. இதர பிற்படுத்தப்பட்டோர் நலப்பிரிவின் மாநில துணைத்தலைவர் ஆற்றல் அசோக்குமார் கலந்து கொண்டார்.

கொடியேற்று விழா

திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் மூலனூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேளாண்பூண்டி உள்ளிட்ட பகுதியில் பா.ஜ.க கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. இதர பிற்படுத்தப்பட்டோர் நலப்பிரிவின் மாநில துணைத்தலைவர் ஆற்றல் அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

அப்போது ஆற்றல் அறக்கட்டளை நிறுவனர் ஆற்றல் அசோக்குமார் கூறியதாவது:-

அரசின் திட்டங்கள்

திருப்பூர் தெற்கு மாவட்ட பகுதிகளில் மத்திய அரசின் திட்டங்களை அனைத்து கிராமப்புற ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டு சேர்ப்பதே எங்களுடைய கட்டாய பணியாக உள்ளது. வரும் 2024-ம் ஆண்டு நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மக்கள் மீண்டும் பாரத பிரதமராக நரேந்திர மோடியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் மூலமாக நாட்டின் வளர்ச்சி உயர பா.ஜ.க. நிர்வாகிகளும் தொண்டர்களும் முழுமனதுடன் செயல்பட வேண்டும்.

மேலும் மத்திய அரசின் திட்டங்கள் சாதாரண கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டி தீவிர முயற்சி மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பா.ஜ.க. தெற்கு ஒன்றிய தலைவர் செல்வேந்திரன், மாவட்ட துணைத்தலைவர் ராஜா என்கிற கோவிந்தசாமி ஒன்றிய பொதுச்செயலாளர்கள் சுமதி. சுப்பிரமணியம் மற்றும் நிர்வாகிகள் சுப்பிரமணி, பாரி, முருகேசன், ஜெயக்குமார், மாரிமுத்து, செ


Next Story