"முல்லை பெரியாறு - கேரளா அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: கோர்ட்டில் தமிழக அரசு பதில்


முல்லை பெரியாறு - கேரளா அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: கோர்ட்டில் தமிழக அரசு பதில்
x

முல்லை பெரியாறு அணையின் சமநிலையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு ஒத்துழைக்க மறுப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மதுரை,

முல்லை பெரியாறு அணை தொடர்பான வழக்கு ஒன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், முல்லை பெரியாறு அணையின் சமநிலையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு ஒத்துழைக்க மறுப்பு தெரிவிப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கேரள அரசின் தடை மனப்பான்மையால் இதுவரை அணையை பலப்படுத்த முடியவில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.


Next Story