முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைவு


முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைவு
x
தினத்தந்தி 22 Nov 2022 7:00 PM GMT (Updated: 22 Nov 2022 7:00 PM GMT)

மழை பெய்யாததால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

தேனி

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை விளங்குகிறது. அணையின் மொத்த நீர்மட்டம் 142 அடி. கடந்த 20-ந்தேதி முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 814 கன அடியாக இருந்தது. இந்நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் நீர்வரத்து குறைந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 138.30 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 522 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் வினாடிக்கு 511 கன அடியாகவும் இருந்தது.


Next Story