முல்லைப்பெரியாறு அணை 136 அடியை தொட்டது - இடுக்கிக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை


முல்லைப்பெரியாறு அணை 136 அடியை தொட்டது - இடுக்கிக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
x

தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது.

தேனி,

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

அதன்படி மாலை 3 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 135.70 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 6,143 கன அடியாக இருந்தது.

இந்த நிலையில், தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. இதனால் இடுக்கி மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேலும் முல்லைப் பெரியாற்றில் ஆக.10 வரை அணை நீர்மட்டம் 137.50 அடியாக நிலை நிறுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story