முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த கோரி மாநில மாநாட்டில் தீர்மானம்
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வலியுறுத்தி மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று முத்தரசன் பேட்டி அளித்தார்
தேனி
உத்தமபாளையத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் 2 நாள் மாவட்ட மாநாடு நடந்தது. மாநாட்டின் இறுதி நாளான இன்று கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்:-
இந்திய ஜனாதிபதி வேட்பாளராக பழங்குடியின பெண் திரவுபதி முர்முவை நியமித்த பா.ஜ.க. அரசு, வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை கைவிட வேண்டும். திருப்பூரில் நடைபெறும் மாநில மாநாட்டில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி எப்போதும் தமிழகத்திற்காக குரல் கொடுக்கும். மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான இளையராஜாவுக்கு கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story