முனீஸ்வரர் கோவில் தீமிதி திருவிழா


முனீஸ்வரர் கோவில் தீமிதி திருவிழா
x

விருத்தாசலத்தில் முனீஸ்வரர் கோவில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் பூதாமூரில் முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தீ மிதி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி முனீஸ்வரர் மற்றும் பெரிய நாயகிஅம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து மேள, தாளம் முழங்க கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கி வைக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் சிகர நிகழ்ச்சியான தீ மிதி திருவிழா வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story