மறியலில் ஈடுபட்ட மாநகர பா.ஜ.க. தலைவர் உள்பட 29 போ் மீது வழக்கு


மறியலில் ஈடுபட்ட மாநகர பா.ஜ.க. தலைவர் உள்பட 29 போ் மீது வழக்கு
x

மறியலில் ஈடுபட்ட மாநகர பா.ஜ.க. தலைவர் உள்பட 29 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

இனாம்குளத்தூரில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும், ஊதிய உயர்வு அளிக்க வேண்டும், பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களை மட்டும் லோடிங், அன்லோடிங் பணிகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது, பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள பா.ஜ.க. மாநகர தலைவர் ராஜசேகரன் தலைமையில் வந்த பா.ஜ.க.வினர் மற்றும் பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தினர் 28 பேர் திருவானைக்காவல் டிரங்க் ரோட்டில் நேற்று முன்தினம் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா கொடுத்த புகாரின் பேரில், சட்டவிரோதமாக திரண்டு சாலை மறியல் செய்ததாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் ராஜசேகர் உள்பட 29 பேர் மீது ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story