தேவகோட்டை அம்மா உணவகத்தில் நகராட்சி ஆணையர் ஆய்வு
தேவகோட்டை அம்மா உணவகத்தில் நகராட்சி ஆணையர் ஆய்வு செய்தார்.
தேவகோட்டை
தேவகோட்டை நகராட்சியில் 144 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதில் முறையாக வாடகை செலுத்தாத 28 கடைகள் சீல் வைக்கப்பட்டு ஏல நடவடிக்கையில் உள்ளது. இந்நிலையில் அனைத்து கடைகளையும் நேற்று நகராட்சி ஆணையர் பார்கவி ஆய்வு செய்தார்.பின்னர் வியாபாரிகளிடம் கடைகளுக்குரிய நிலுவை வாடகைகளை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும், செலுத்த தவறினால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.எனவே குறிப்பிட்ட காலத்திற்குள் அனைத்து கடைகளுக்கும் உரிய வாடகைகளையும் நகராட்சி அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என்றும் கூறினார். மேலும் தேவகோட்டை பஸ் நிலையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் ஆய்வு செய்தார்.அங்கு தயாரான உணவை சாப்பிட்டு பார்த்தார். சுகாதாரமாக எப்போதும் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். ஆணையாளருடன் மேலாளர் ராஜேஷ், வருவாய் ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் சென்றனர்.