மறைமலைநகரில் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அபராதம் - நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை


மறைமலைநகரில் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அபராதம் - நகராட்சி கமிஷனர் எச்சரிக்கை
x

மறைமலைநகர் நகராட்சியில் மக்கள் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அபராதத்துடன் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கமிஷனர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு

கால்வாய் ஆக்கிரமிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி கமிஷனர் சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று காலை பெய்த கனமழையின் காரணமாக கலைவாணர் தெரு, வள்ளல் அதியமான் தெரு, பாவேந்தர் சாலை, அடிகளார் சாலை, வள்ளல் குமரன் தெரு ஆகிய பகுதிகளில் மழைநீர் சாலைகளில் தேங்கி நின்றது.

இதனைப் பற்றி தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று நகராட்சி ஊழியர்கள் மூலம் மழைநீர் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் கால்வாய்களை ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். உடனே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு மழைநீர் செல்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.

அபராதம்

தனியாரால் மழைநீர் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தால் அதன் உரிமையாளர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ள வேண்டும், அவ்வாறு அகற்றாத பட்சத்தில் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு அபராதமும் விதிக்கப்படும்.

எனவே பொதுமக்கள் கடைக்காரர்கள், தொழில் நிறுவனங்கள், கால்வாயை ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அதனை உடனடியாக அகற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பேரிடர் கால அவசர உதவிக்கு 73977382211 எண்ணில் நகராட்சி கமிஷனரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story