பேரூராட்சி தி.மு.க. கவுன்சிலர் மீது தாக்குதல்
மேலூர் அருகே பேரூராட்சி தி.மு.க. கவுன்சிலர் மீது தாக்குதல் நடந்தது.
மதுரை
மேலூர்,
மேலூர் அருகே உள்ள அ.வல்லாளபட்டி பேரூராட்சியில் 10-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ரஹமத்துல்லா (வயது 39). இவர் அரிட்டாபட்டி சாலையில் காரில் சென்றபோது அந்த வழியே சரக்கு வேனில் வந்த இருவர் ரஹமத்துல்லாவிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த ரஹமத்துல்லா மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். பேரூராட்சி தேர்தலின் போது ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக வேன் டிரைவர் ராஜ்குமார் (40) உடன் வந்த கார்த்திகேயன் (45) ஆகிய 2 பேரும் தன்னை தாக்கி 5 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டதாக ரஹமத்துல்லா மேலூர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story