சொத்து தகராறில் மகனை கொன்ற 90 வயது முதியவருக்கு மருத்துவமனையில் சிகிச்ைச


சொத்து தகராறில் மகனை கொன்ற 90 வயது முதியவருக்கு மருத்துவமனையில் சிகிச்ைச
x

சொத்து தகராறில் மகனை கொன்ற 90 வயது முதியவருக்கு மருத்துவமனையில் சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர்

பெருமாநல்லூர், செப்.3-

சொத்து தகராறில் மகனை கொன்ற 90 வயது முதியவருக்கு மருத்துவமனையில் சிகிச்ைச அளிக்கப்பட்டு வருகிறது.

பெருமாநல்லூர் அருகே உள்ள மேற்குபதி ஊராட்சி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 90). விவசாயி. இவருக்கு பழனிசாமி (65) என்ற மகனும், சுப்புலட்சுமி (58) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் ராமசாமி தனக்குரிய சொத்தில் ஒரு ஏக்கர் 30 சென்ட் நிலத்தை தனக்கு எடுத்துக்கொண்டு மீதம் இருந்த சொத்தை, மகன் மற்றும் மகளுக்கு சரிபாதியாக பிரித்துக்கொடுத்துள்ளார்.

இந்நிலையில் ராமசாமியிடம் இருந்த 1.30 ஏக்கர் இடத்தை தனக்கு எழுதித்தருமாறு பழனிசாமி அடிக்கடி தந்தைக்கு தொந்தரவு கொத்து வந்தார். இந்தநிலையில் தந்தை, மகனுக்கும் இடையே சொத்து பிரச்சினை எழுந்தது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த ராமசாமி தனது மகன் பழனிச்சாமியை சம்மட்டியால் அடித்து கொலை செய்தார்.

இது தொடர்பான தகவலின் பேரில் பெருமாநல்லூர் போலீசார் விரைந்து வந்து விசாரநண நடத்தி ராமசாமியை கைது செய்தனர். வயிறு மற்றும் உடலில் சில பகுதிகளில் ராமசாமிக்கு காயங்கள் காணப்பட்டது. இதன் காரணமாக அவர் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ராமசாமி சிகிச்சை பெற்று வருகிறார். மகன் பழனிச்சாமியை தாக்கி விட்டு ராமசாமி தனக்குத்தானே காயங்கள் ஏற்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது. ராமசாமிக்கு 90 வயது என்பதால் சிகிச்சையில் இருப்பவர் பூரண நலம் அடைந்த பிறகு மேற்கொண்டு போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.


Related Tags :
Next Story