தாய்-மகன் உள்பட 4 பேர் வெட்டி படுகொலை
பல்லடம் அருகே தாய் மகன் உள்பட 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருேக உள்ள கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் என்பவரின் மகன் செந்தில்குமார் (வயது 47). இவர் பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இவருடைய சித்தப்பா பழனிசாமியின் மகன் மோகன்ராஜ் (45). இவரது தாயார் புஷ்பவதி. இவருடைய அக்காள் ரத்தினாம்பாள். இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில் அடுத்தடுத்து வசித்து வந்தனர்.
வெட்டிக்கொலை
நேற்று இரவு 7 மணிக்கு வீட்டில் செந்தில்குமார் தனியாக இருந்தார். அப்ேபாது ஒரு கும்பல் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்தது. அந்த கும்பல் திடீரென்று செந்தில்குமாைர சரமாரியாக வெட்டியது. இதனால் அய்யோ காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று செந்தில்குமார் அபயக்குரல் எழுப்பினார். அவருடய குரல் கேட்டு பதற்றத்துடன் மோகன் ராஜ் அங்கு ஓடிவந்தார். அப்போது ஒரு கும்பல் செந்தில்குமாைர வெட்டுவதை பார்த்து அவர் நெஞ்சம் பதைபதைத்தது. உடனே செந்தில்குமாரை காப்பற்ற மோகன்ராஜ் முயன்றார். அதற்குள் அந்த கும்பல் செந்தில்குமாரை வெட்டி வீழ்த்தியது. கொலையை தடுக்க முயன்ற மோகனைராஜையும் அந்த கும்பல் கொடூரமாக வெட்டியது. இதனால் மோகன்ராஜூம் அவர்களிடம் தப்பிக்க கூக்குரல் எழுப்பியவாறு தப்பிக்க முயன்றார். ஆனால் அந்த கும்பல் அவரையும் வெட்டி சாய்த்தது.
பெண்களையும் வெட்டி சாய்த்தனர்
இதற்கிடையில் மோகன்ராஜின் அபாயகுரல் கேட்டு அவருடைய தாயார் புஷ்பவதி, புஷ்பவதியின் அக்காள் ரத்தினாம்மாள் ஆகியோரும் அங்கு வந்தனர். அப்போதும் வெறி அடங்காத அந்த கும்பல் அவர்கள் இருவரையும் வெட்டியது. இதனால் அவர்களும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். இவை அனைத்தும் சிறிது நேரத்தில் நடந்து விட்டது.
கொலையில் ஈடுபட்ட கும்பல் வெறி ெகாண்டு வெட்டி வீழ்த்தியதால் அந்த தெரு முழுவதும் கொலை செய்யப்பட்டவர்களின் கை, கால்கள் மற்றும் உடற்பாகங்கள் சிதறிக்கிடந்தன. அந்த தெருமுழுவதும் ரத்தம் ஆறாக ஓடியிருந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் மரண ஓலம் கேட்டது.
இந்த கொடூர கொலை குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் மற்றும் பல்லடம் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு கொலையாகி கிடந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் கொலையானவர்களின் உறவினர்கள் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் கொலையாளிகளை கைது செய்த பிறகு உடல்களை எடுக்க அனுமதிப்போம் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 4 உடல்களை போலீசார் அங்கிருந்து அப்புற்படுத்தினர். இதற்கிடையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் காட்டுத்தீபோல் பரவியது. இதனால் நேரம் செல்ல செல்ல பொதுமக்கள் கூட்டம் கூடியது. மேலும் பற்றமும் அதிகரித்தது. இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
ஒரே நேரத்தில் 4 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.