கத்தியால் குத்தி தொழிலாளி கொலை


கத்தியால் குத்தி தொழிலாளி கொலை
x

அதிராம்பட்டினம் அருகே பணத்தகராறில், கத்தியால் குத்தி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம்:-

அதிராம்பட்டினம் அருகே பணத்தகராறில், கத்தியால் குத்தி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூலி தொழிலாளர்கள்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள அணைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 50). முதல்சேரி ஊரைச் சேர்ந்த மைக்கேல் துரையரசன்(58), பாஸ்கர்(42). இவர்கள் 3 பேரும் விவசாய கூலி வேலை செய்து வந்்தனர். மேலும் தற்போது நுங்கு வியாபாரமும் செய்து வந்தனர்.

இந்த நிலையில் பள்ளிகொண்டான் செட்டியக்காடு பகுதியில் இவர்கள் 3 பேருக்கும் இடையே சம்பளத்தொகை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

கத்தியால் குத்திக்கொலை

இதில் ஆத்திரம் அடைந்த மைக்கேல் துரையரசன், பாஸ்கர் ஆகிய இருவரும் சேர்ந்து செல்வராஜின் மார்பு பகுதியில் கத்தியால் குத்தினர்.

இதில் படுகாயம் அடைந்த செல்வராஜை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

2 பேர் கைது

இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து மைக்கேல் துரையரசன் மற்றும் பாஸ்கர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இறந்த செல்வராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட தொழிலாளி செல்வராஜ்க்கு பொடுசு என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

1 More update

Next Story