ரூ.40 ஆயிரத்துடன் எரிந்த நிலையில் பெண் பிணம்


ரூ.40 ஆயிரத்துடன் எரிந்த நிலையில் பெண் பிணம்
x

உசிலம்பட்டி அருகே ரூ.40 ஆயிரத்துடன் எரிந்த நிலையில் பெண் பிணம் கிடந்தது.

மதுரை

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே சுடுகாட்டில் சுமார் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் கிடப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் எழுமலை போலீசார் விரைந்து சென்றனர். அங்கு எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண்ணின் உடலின் அருகே மண்எண்ணெய் கேன், தீப்பெட்டி மற்றும் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 500 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி அந்த இந்த பெண் யார்? கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story